×

விளைச்சல் சரிவால் பாகற்காய் விலை உயர்வு

ஓசூர், ஜூன் 13: ஓசூரில் பாகற்காய் விளைச்சல் சரிந்ததால், விலை உயர்ந்துள்ளது. ஓசூரில் எப்போதும் இதமான சீதோஷ்ணம் நிலவுவதால், மலர் சாகுபடியை போலவே, காய்கறிகளும் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தற்போது, பாகற்காய் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பயிரிட்ட நாளில் இருந்து 70 நாட்களில் அறுவடைக்கு வரும் என்பதால், ஓசூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், சுமார் 500 ஏக்கர் பரப்பில் இக்காய்கள் பயிரிடப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது பாகற்காய் விளைச்சல் எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளது. ஓரு ஏக்கரில் பாகற்காய் பயிரிட ₹1.50 லட்சம் செலவாகிறது. ஏக்கருக்கு 8 முதல் 10 டன் வரை விளைச்சல் கிடைக்கும். இது வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளூரில் தற்போது கிலோ ₹60 முதல் ₹65 வரை விற்பனை செய்யப்படுகிறது,’ என்றனர்.

Tags :
× RELATED முட்டை விற்பனை ஜோர்